Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,840 உயர்ந்து ரூ. 1,12,400க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,840 உயர்ந்து ரூ. 1, 12,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக தங்கம் விலையானது சற்று குறைந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அந்த வகையில் டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தில் மத்திய வங்கிகள் அதிகளவு முதலீடு செய்தனர். இதனால் தங்கத்தின் விலையானது அதிகரித்தது. இதனால் நடுத்தர வர்க்க மக்களால் தங்கத்தை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் போர் காரணமாக தங்கம் விலை அதிரடி சரிவை கண்ட பிறகு ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. அதேபோல், இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்தது. அந்த வகையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு 180 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,820-க்கும் சவரனுக்கு 1,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,840 உயர்ந்து ரூ. 1, 12,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.14,050க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.270-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கும் விற்பனையாகிறது.