Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,000க்கு விற்பனை!!

சென்னை: சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், வட்டி விகித ஏற்றத்தாழ்வுகள், புவியியல் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன் அடிப்படையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் வாரத்தில் இறுதி நாளான சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,360க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,170க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று தங்கம் சந்தைக்கு விடுமுறை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்துரூ.1,13,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.14,125க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது.