சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,13,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்களை கணக்கில் கொண்டு தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.
அதாவது நேற்று முன்தினம் காலையில் தங்கம் விலை சற்று உயர்ந்தது. அதாவது காலையில் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, கிராம் ரூ.14,385க்கும், பவுனுக்கு ரூ.120 உயர்ந்து, பவுன் ரூ.1,15,080க்கும் விற்பனையானது. அதே போல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.255க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனையாது. நேற்று முன்தினம் மாலையில் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.
மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 குறைந்து ஒரு கிராம் ரூ.14,175க்கும், பவுனுக்கு ரூ.1,680 குறைந்து ஒரு பவுன் ரூ.1,13,400க்கு விற்பனையானது. அதே நேரத்தில் வெள்ளி விலையும் நேற்று முன்தினம் மாலையில் மேலும் குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.250க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, பார் வெள்ளி 2.50 லட்சத்துக்கும் விற்பனையானது. இதன் மூலம் வெள்ளி விலை நேற்று முன்தினம் காலை, மாலை என ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.1,11,600க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து ரூ.13,950க்கும், வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ. 250க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,13,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ரூ.14,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.255-க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.



