சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,440 குறைந்து ரூ.1,12,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்களை கணக்கில் கொண்டு தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.
அதாவது நேற்று முன்தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,13,600க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.14,200க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,760க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,220க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,440 குறைந்து ரூ.1,12,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 குறைந்து ரூ.14,040க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.255க்கு விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.



