சென்னை: தனக்கு பரிசாக வந்த சுமார் 10,000 புத்தகங்களை பல்வேறு நூலகங்களுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வழக்கியுள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தவர்கள், அவருக்கு அளித்த புத்தகங்களை, தங்கள் கல்லூரி மற்றும் பகுதிகளில் உள்ள நூலகங்களுக்கு வழங்கிடுமாறு வைத்த கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட திமுக தலைவர், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த நூல்களை, நூலக நிர்வாகிகளிடம் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தூய சவேரியார் (தன்னாட்சி) கல்லூரி நூலகத்திற்கு 5,000 புத்தகங்கள், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ரஹ்மானியா கல்வி கூடம் வாட் பயிற்சி மையத்திற்கு 3,000 புத்தகங்கள், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், அரசு கலை கல்லூரி நூலகத்திற்கு 2000 புத்தகங்கள் என 10,000 புத்தகங்கள் இன்று வழக்கப்பட்டது. இதுவரை 7 லட்சத்து 10 புத்தகங்களை பல்வேறு கல்லூரிகள் மற்றும் மாவட்ட நூலகங்களுக்கு மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


