Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை,கோவை,திருச்சியில் ராணுவத்திற்கு நேரடி ஆள்சேர்ப்பு

ஆள்சேர்ப்பு திட்டத்தின் பெயர்: அக்னிவீர்

இன்டேக்-2026-27 (அக்னிபாத் ஸ்கீம்).

1. அக்னீவீர் (ஜெனரல் டியூட்டி): குறைந்தபட்சம் 45% மதிப்பெண்களுடன்

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 17½ முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உயரம் மற்றும் மார்பளவு: குறைந்தபட்சம் 166 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 77 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். 5 செ.மீ., விரிவடையும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.

2. அக்னிவீர் (டெக்னிக்கல்): இயற்பியல், வேதியியல், கணிதப் பாடங்களைக் கொண்ட பிளஸ் 2 பாடத்தில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக் மோட்டார் வெஹிக்கிள், மெக்கானிக் டீசல், எலக்ட்ரானிக் மெக்கானிக்கல், டெக்னீசியன் பவர் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ், எலக்ட்ரீசியன், பிட்டர், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், டிராப்ட்ஸ்மேன் (ஆல்டைப்ஸ்), சர்வேயர், ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் அசிஸ்டென்ட், இன்பர்மேஷன் அண்ட் கம்யூனிகேசன் டெக்னாலஜி சிஸ்டம் மெயின்டெனன்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, மெக்கானிக் கம் ஆபரேட்டர் எலக்ட்ரிக் கம்யூனிகேஷன் சிஸ்டம், வெஷல் நேவிகேட்டார், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ்/கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னாலஜி ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் ஐடிஐ/டிப்ளேமா இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:17½ முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உயரம் மற்றும் மார்பளவு: குறைந்தபட்சம் 165 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 77 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். 5 செ.மீ விரிவடையும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.

3. அக்னிவீர் (ஸ்டோர் கீப்பர்/டெக்னிக்கல்/கிளார்க்). கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 17½ முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உயரம் மற்றும் மார்பளவு: குறைந்தபட்சம் 162 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 77 செ.மீ அகலம் இருக்க வேண்டும். 5 செ.மீ விரிவடையும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.

4. அக்னீவீர் (டிரேட்ஸ்மேன்/ஆல் ஆர்ம்ஸ்). கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது:17½ முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உயரம் மற்றும் மார்பளவு: குறைந்தபட்சம் 165 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 77 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். 5 செ.மீ விரிவடையும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள், விண்ணப்பதாரரின் உடற்தகுதி, உடற்திறன் தகுதி, மருத்துவத் தகுதி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைன் எழுத்துத் தேர்வு ஜூன் 1ல் தொடங்கும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு முதல் ஆண்டு ரூ.30 ஆயிரம், 2ம் ஆண்டு ரூ.33 ஆயிரம், மூன்றாம் ஆண்டு ரூ.36,500, நான்காம் ஆண்டு ரூ. 60 ஆயிரம் சம்பளம் தரப்படும்.

www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.04.2026.