Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தியிடம் முதல்வர் வேட்புமனுவை அளித்தார்.

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 4-வது முறை வேட்பாளராக போட்டியிடுகிறார். எனவே கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முதலமைச்சர் இன்று தாக்கல் செய்தார்.

ஒருங்கிணைந்த மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரி சாந்தியிடம் வேட்புமனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளே வேட்புமனுவை முதலமைச்சர் தாக்கல் செய்தார்.

அதே போல 2011, 2016, 2021 ஆகிய சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1989,1996,2001,2006 தேர்தல்களில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றார் மு.க.ஸ்டாலின்.

இதுவரை 7 முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் மு.க.ஸ்டாலின். இந்நிலையில் தற்போது சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 4-வது முறை போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார்.