Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1440 குறைந்து ரூ.1,10,560க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1440 குறைந்து ரூ.1,10,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் விலை ஒரு கிராமுக்கு 180 குறைந்து ரூ.13,820க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.265க்கும் விற்பனையாகிறது.

ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக தங்கம் விலையானது சற்று குறைந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அந்த வகையில் டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தில் மத்திய வங்கிகள் அதிகளவு முதலீடு செய்தனர். இதனால் தங்கத்தின் விலையானது அதிகரித்தது. இதனால் நடுத்தர வர்க்க மக்களால் தங்கத்தை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

கடந்த 1ஆம் தேதி தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 180 ரூபாய் விலை குறைந்து 13,920 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,440 ரூபாய் குறைந்து 1,11,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.மே 2ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 80 ரூபாய் உயர்ந்து 14,000 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து 1,12,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மே-3ஆம் மற்றும் மே-4ஆம் தேதி தங்கம் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் 14,000 ரூபாய்க்கும், சவரன் 1,12,000 ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று தங்கத்தின் விலையானது குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 180 ரூபாய் குறைந்து 13,820 ரூபாய்க்கும், சவரனுக்கு 1440 ரூபாய் குறைந்து 1,10,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கடந்த 2 நாட்களாக உயராமல் இருந்த நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 265 ரூபாய்க்கும்,கிலோ பார் வெள்ளிக்கு 5ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 65ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.