Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,18,800க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,18,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.1,120 அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்களை கணக்கில் கொண்டு தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,16,800க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.14,600க்கு விற்பனையானது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.260க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து இன்று காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,17,680க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,710க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.265க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை சில மாதங்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. மேலும் காலை, மாலை என இரு வேலைகளிலும் தங்கம் விலை மாற்றம் கண்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,18,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.1,120 அதிகரித்துள்ளது. தங்கம் விலை மாலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,850க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.270க்கு விற்பனை செய்யப்படுகிறது.