Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,14,320க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,14,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்களை கணக்கில் கொண்டு தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதாவது வாரத்தின் தொடக்க நாளிலும் தங்கம் விலை அதிகரித்து காணப்பட்டது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,270க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 14,160க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் நேற்று மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.255க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,14,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,290க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.255, ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.