சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,15,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்களை கணக்கில் கொண்டு தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.
கடந்த 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதுவும் வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை மேலும் குறைந்தது.
அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ஒரு கிராம் ரூ.14,370க்கும், பவுனுக்கு ரூ.1,080 குறைந்து ஒரு பவுன் ஒரு லட்சத்து 14960க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் நேற்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.260க்கும், பார் வெள்ளி ரூ.2.60 லட்சத்துக்கு விற்பனையானது.
இதையடுத்து இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,15,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ. 14,385க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.255க்கு விற்பனை செய்யப்படுகிறது.



