சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,20,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்களை கணக்கில் கொண்டு தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.
அதாவது, நேற்றைய முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,950க்கும், பவுனுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 19600க்கு விற்பனையானது. வெள்ளி விலை நேற்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.270க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
இதற்கிடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதுவும் வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,20,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.15,030க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.275-க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட விசேஷ தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது விசேஷத்திற்கு நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




