Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,360 அதிரடியாக சரிவு..!

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைந்துள்ளது. இதனை அடுத்து ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,16,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து ஒரு கிராம் விலை ரூ.14,505க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள், எப்போதும் தங்கம் விலையில் எதிரொலிப்பது வழக்கம். இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று காலையில் கிராமுக்கு ரூ.75 குறைந்து, ரூ.14,650க்கும், சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,17,200-க்கும் விற்பனையானது. இதற்கிடையில் மாலையில் தங்கத்தின் விலை திடீரென அதிகரித்தது. கிராமுக்கு ரூ.150ம், சவரனுக்கு ரூ.1,200ம் உயர்ந்தது. அந்த வகையில் ஒரு கிராம் ரூ.14,800க்கும், ஒரு சவரன் ரூ.1,18,400க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14,725-க்கும், ஒரு சவரன் ரூ.1,17,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,360 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,16,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.295 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,505-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.260க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் விற்பனையாகி வருகிறது.