Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,19,600க்கு விற்பனை!

சென்னை: சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்களை கணக்கில் கொண்டு தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,19,600க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,710க்கும், பவுனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 17,680க்கும் விற்பனையானது. நேற்று காலை தங்கத்தை போல வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2.65 லட்சத்துக்கும் விற்றது.

நேற்று மாலையிலும் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.140 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,850க்கும், பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 18,800க்கும் விற்பனையானது. இதே போல மாலையில் வெள்ளி விலையும் உயர்ந்தது.

மாலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.270க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2.70 லட்சத்துக்கும் விற்பனையானது. ஒரே நாளில் தங்கம் விலை காலை, மாலை என பவுனுக்கு ரூ.2 உயர்ந்து நகை வாங்குவோரை மேலும் கலக்கமடைய செய்துது. இதேபோல, வெள்ளி விலையில் காலை, மாலை என கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,19,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14,950க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.270-க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.