சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,600க்கு செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், வட்டி விகித ஏற்றத்தாழ்வுகள், புவியியல் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2400 உயர்ந்து ரூ.1,14,000க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.14,250க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 260க்கு விற்பனைசெய்யப்பட்டது.
மேலும் நேற்று மாலை சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து 1,13,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்திருந்த நிலையில் மாலையில் ரூ.800 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.14,150க்கு விற்பனையானது சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கு விற்பனை செய்யப்பட்டது.



