Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளில் நாளை (ஆக.02) இ-கேஒய்சி சிறப்பு முகாம்!

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளில் இ-கே ஒய் சி (e-kyc) பதிவு சிறப்பு முகாம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்கள் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைவிரல் ரேகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தற்போது வரை கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமிற்கு சென்று தங்களது கைவிரல் ரேகையினை பதிவு செய்திட வேண்டும்.

பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் இப்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைக்கு சென்று தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்யலாம்.

எனவே, அரசின் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விரல் ரேகைப் பதிவை விடுதலின்றி முழுமையாக பதிவு செய்ய வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார் என்று சென்னை மண்டல கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் அவர்கள் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.