Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னை, தேனி, மதுரை, புதுக்கோட்டை, கோவை மாவட்டங்களில் விபத்துகள் எண்ணிக்கை கடந்தாண்டில் அதிகரிப்பு:ஆய்வில் தகவல்

சென்னை: கடந்த ஆண்டில் சென்னை, தேனி, மதுரை, புதுக்கோட்டை, கோவை மாவட்டங்களில் விபத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது.சென்னையில் அதிக ஆபத்துள்ள சாலையாக மூலக்கடை-புழல் வரை 6 கி.மீ தூரத்தில் உள்ள சாலை உள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் அச் சாலையில் 132 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதில் 19 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. தவறான பாதையில் வாகனங்களை இயக்குவது விபத்துக்கு முக்கியமான காரணமாக உள்ளது. அதே போல், நெடுஞ்சாலையும், சர்வீஸ் சாலையும் வெவ்வேறு விதத்தில் இருப்பதால் அதிக விபத்து நடைபெறும் சூழல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இரண்டாவதாக கிண்டி கத்திப்பாரா - விமானநிலையம் செல்லும் சாலையில் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. 2024ல் மட்டும் 104 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதில் 13 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அதிவேக வாகன இயக்கத்தின் காரணமாக விபத்துகள் ஏற்படுகிறது. அப் பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் சாலை குறுகலாக உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

மூன்றாவதாக இசிஆர்-கொட்டிவாக்கம் இடையே உள்ள 10 கி.மீ சாலையில் 2024ம் ஆண்டில் 85 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதில் 19 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துக்கு முதன்மை காரணமாக திடீர் பள்ளம் மற்றும் கேபிள் அமைக்க சாலைகளை தோண்டுவது தான் காரணமாக கூறப்படுகிறது. அதே போல் தாமதாக பணிகள் நடைபெறுவதால் அதிக விபத்துகள் நடைபெறுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குமுளி நெடுஞ்சாலையில் 2024ம் ஆண்டில் 331 விபத்துகள் ஏற்பட்டுள்ளது.

இதில் 112 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதே போல் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர்-சாவேரியார்புரம் சாலையில் 264 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதில் 95 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மதுரை சோதனைச்சாவடி-ஆண்டிபட்டி கணவாய் சாலையில் 2024ம் ஆண்டில் 297 விபத்துகள் ஏற்பட்டுள்ளது.

இதில் 77 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. கோவை வாளையாறு நெடுஞ்சாலையில் 2024ம் ஆண்டில் 331 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதில் 49 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. குறிப்பாக ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 6000 இடங்களில் 2000 இடங்களில் தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக ரூ.132 கோடி தமிழ்நாடு அரசு சார்பில் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகிறது.