தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குற்றப்பத்திரிகைகளை ஒன்றாக இணைக்க கோரி யூடியூபர் சங்கர் தொடர்ந்த வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லி: பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக யூடியூபர் சங்கர் கைது செய்யப்பட்டார். பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி அவர், சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் மதுரை மத்திய சிறையில் இருந்து கடந்தாண்டு செப்டம்பர் 25ம் தேதி வெளியில் வந்தார். இதையடுத்து தன் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய கோரி யுடியூபர் சங்கர் தாக்கல் செய்திருந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து, ‘யூடியூபர் சங்கர் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க தடையில்லை’ என உத்தரவிட்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் கடந்த பிப்ரவரி 24ம் தேதி அனுமதி வழங்கியது.

Advertisement

இந்நிலையில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து குற்றப்பத்திரிக்கைகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்று யூடியூபர் சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் குமார், அலோக் அரதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. யூடியூபர் சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மனுதாரருக்கு எதிரான 15 வழக்குகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து குற்றப்பத்திரிகைகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும். ஒரு பேட்டி கொடுத்தமைக்காக அவர் மாநிலம் முழுவதும் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டார்’ என்றார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர், ”அனைத்து வழக்குகளுக்குமான குற்றப்பத்திரிக்கை ஒரே நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

அதில் ஒரு பிரச்னையும் கிடையாது. குறிப்பாக யூடியூபர் சங்கரை பொருத்தமட்டில் இந்த நீதிமன்றம் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளையும் மீறி செயல்பட்டு வருகிறார்’ என்றனர்.இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ”இந்த விவகாரத்தில் ஒரே நீதிமன்றத்தில் வெவ்வேறு வழக்குகளில் தனித்தனியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதில் எந்தவித தவறும் இருப்பதாக தெரியவில்லை. எனவே அனைத்து குற்றப்பத்திரிகைகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்கிறோம் என்று உத்தரவிட்டு, ”யூடியூபர் சங்கர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

Advertisement

Related News