தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திராவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் ரூ.25,000 நிதி உதவி அறிவித்த சந்திரபாபு நாயுடு!

 

Advertisement

ஆந்திரா: ஆந்திராவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் ரூ.25,000 நிதி உதவியை சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கு 12 மாத ஊதியத்துடன் விடுமுறை என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் மற்றும் அதிகரித்து வரும் முதியோர் மக்கள்தொகை ஆகிய சவால்களைச் சமாளிக்க, ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு புரட்சிகரமான மக்கள்தொகை மேலாண்மைக் கொள்கையை அறிவித்துள்ளார். இந்தக் கொள்கையின் கீழ், அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தம்பதிகளுக்குப் பல்வேறு நிதியுதவிகள் மற்றும் சலுகைகளை அரசு வாரி வழங்கி உள்ளது.

இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிகளுக்குத் தலா ரூ. 25,000 ஒருமுறை நிதியுதவியாக வழங்கப்படும். மூன்றாவது குழந்தையின் ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்காக, அக்குழந்தைக்கு 5 வயது ஆகும் வரை மாதம் ரூ. 1,000 வீதம் என மொத்தம் 60 மாதங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். 18 வயது வரை குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க ஏற்பாடு செய்யப்படும். மக்கள்தொகை பெருக்கத்தை ஊக்குவிக்க அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் சலுகைகளை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். தாய்மார்களுக்கு 12 மாதங்கள் (ஒரு வருடம்) சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு. தந்தைமார்களுக்கு 2 மாதங்கள் தந்தைவழி விடுப்பு.

கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் ஊழியர்களுக்குப் பதவி உயர்வுகளில் முன்னுரிமை அளிப்பதற்கான சட்டத் திருத்தங்களும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. ஆந்திராவின் மொத்தக் கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate) தற்போது 1.5 ஆகக் குறைந்துள்ளது. இது மக்கள்தொகையை நிலையாக வைத்திருக்கத் தேவையான 2.1 என்ற அளவை விட மிகவும் குறைவு. இதனால், 2047-ம் ஆண்டிற்குள் ஆந்திரா ஒரு "வயதான மாநிலமாக" மாறும் அபாயம் உள்ளதால், இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முதலமைச்சர் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அரசின் இந்த அதிரடி சலுகையால் பெற்றோர்கள் குதூகலம் அடைந்துள்ளனர். இனி ஆந்திராவில் எந்த வீட்டில் பார்த்தாலும் குவா குவா என்ற சத்தம் ஒலித்துகொண்டே இருக்கும் என சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.

 

Advertisement