செயின்ட் லூயிஸ்: அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா, இந்த தொடரில் சாம்பியனான முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். பைனலில் அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவுடன் மோதிய பிரக்ஞானந்தா (21 வயது) முதலாவது கிளாசிகல் ஆட்டத்தில் தோல்வி, 2வதில் டிரா செய்து 6 புள்ளிகள் பின்தங்கினாலும், பின்னர் ரேப்பிட் முறையில் நடந்த 2 ஆட்டங்களிலும் அபாரமாக வென்றதுடன் பிளிட்ஸ் பிரிவிலும் அமர்க்களமாக செயல்பட்டு 15-13 என்ற புள்ளிக் கணக்கில் முதலிடம் பிடித்தார்.
அமெரிக்க வீரர் வெஸ்லி சோ 3வது இடம் பிடித்தார். முதல் 3 இடங்களைப் பிடித்த பிரக்ஞானந்தா, கருவானா, வெஸ்லி ஆகியோர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கிராண்ட் செஸ் டூர் தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளனர்.



