தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சால்ட் அதிரடி ஆட்டத்தால் சாம்பியன் இங்கிலாந்து வெற்றி

Advertisement

கிராஸ் ஐலெட்: ஐசிசி டி20 உலக கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் நேற்று போட்டியை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிகள் களம் கண்டன. பிரிவு-1ல் உள்ள அணிகள் மோதிய இந்த ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் தீவு நாடுகளில் உள்ள கிராஸ் ஐலெட் நகரில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனால் ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெ.இ முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணிக்காக பொறுப்பாக விளையாடிய பிராண்டன் கிங் 23(13பந்து, 3பவுண்டரி, 1சிக்சர்), ஜான்சன் சார்லஸ் 38(34பந்து, 4பவுண்டரி 1 சிக்சர்), பூரன் 36(32பந்து, 4பவுண்டரி 1 சிக்சர்), ரோவ்மன் 36(17பந்து, 5சிக்சர்) ரன் எடுத்து ஸ்கோர் உயர உதவினர். இடையில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ரஸ்ஸல் ஏமாற்றமளித்தார். எனினும் வெ.இ 20ஓவர் முடிவில் 4விக்கெட் இழப்புக்கு 180ரன் குவித்தது. அந்த அணியின் ரூதர்போர்டு 28(15பந்து, 1பவுண்டரி, 2சிக்சர்), ரொமாரியோ 5ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, அடில் ரஷித், ஆர்ச்சர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். தொடர்ந்து 181ரன் ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட், கேப்டன் ஜோஸ் பட்லர் இணை பவர் பிளேயில் விக்கெட் இழப்பின்றி 58ரன் விளாசியது. அதன்பிறகு பட்லர் 25, மொயீன் அலி 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். இருவரும் தலா 2 பவுண்டரிகளை விளாசினர்.

அதன் பிறகு இணை சேர்ந்த சால்ட், பேர்ஸ்டோ இருவரும் அதிரடியாக விளையாடி 17.3ஓவரிலேயே இலக்கை எட்டினர். அதனால் இங்கிலாந்து 2விக்கெட்களை மட்டும் இழந்து 181ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. அந்த அணியில் சால்ட் 87(47பந்து, 7பவுண்டரி, 5சிக்சர்), பேர்ஸ்டோ 48(26பந்து, 5பவுண்டரி, 2சிக்சர) விளாசி கடைசி வரை களத்தில் நின்றனர். வெ.இ வீரர்கள் ரஸ்ஸல், ரோஸ்டன் இருவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். வெஸ்ட் இண்டீஸ் கோட்டையில் வென்ற இங்கிலாந்தின் சால்ட் ஆட்ட நாயகனாக தேர்வானார்.

* டி20 உலக கோப்பைகளில் இங்கிலாந்து 4வது முறையாக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. அதிகபட்சமாக 2022ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

* டி20 ஆட்டங்களில் ஒரே அணிக்கு எதிராக அதிக சிக்சர்கள் விளாசியவர்கள் பட்டியலில் சால்ட் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் வெ.இக்கு எதிராக 32சிக்சர்களை வெளுத்துள்ளார்.

* அதேபோல் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் வெளுத்த வெ.இ வீர்கள் பட்டியலில் 32சிக்சர்களுடன் ரோவ்மன் முதல் இடத்தில் இருக்கிறார்.

* வெ.இக்கு எதிரான டி20 ஆட்டங்களில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலிலும் சால்ட் முதல் இடத்தை எட்டியுள்ளார். அவர் 9 இன்னிங்சில் 478ரன் குவித்துள்ளார்.

* டி20 உலக கோப்பைகளில் ஒரே ஓவரில் அதிக ரன் கொடுத்தவர்களின் வரிசையில் 6வது இடத்தை பிடத்துள்ளார் வெ.இ வீரர் ரொமாரியோ. அவர் இங்கிலாந்துக்கு எதிராக 16வது ஓவரை வீசி 3சிக்சர், 3பவுண்டரி என 30 ரன்னை அள்ளிக் கொடுத்தார்.

* டி20 ஆட்டங்களில் அதிக ரன் சேர்த்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் ேஜாஸ் பட்லர் 2954ரன்னுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். அடுத்த இடங்களில் முகமது ரிஸ்வான்(பாக், 2952ரன்), குயின்டன் டி காக்(தெ.ஆ, 2450ரன்), முகமது ஷஹசத்(ஆப்கான், 2030ரன்), எம்.எஸ்.டோனி(இந்தியா, 1617 ரன்) ஆகியோர் உள்ளனர்.

* ஒரு வீரர் கூட அரைசதம் விளாசாமல் வெ.இ அதிகபட்ச டி20 ஸ்கோர் சேர்த்த பட்டியலில் இந்த ஆட்டம் 2வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் 2023ம் ஆண்டு தெ.ஆ அணிக்கு எதிராக வெ.இ 220/8 ரன் வெளுத்த ஆட்டம் முதல் இடத்தில் உள்ளது.

Advertisement