Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
DMK MK Stalin
search-icon-img
Advertisement

5 முறை சாம்பியன் சிஎஸ்கே தடுமாறுவது அதிர்ச்சியளிக்கிறது: மாஜி வீரர் பத்ரிநாத் ஆவேசம்

சென்னை: நடப்பு ஐபிஎல்-2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை தான் ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஆர்சிபிக்கு எதிராக விளையாடிய சென்னை அணி தனது மூன்றாவது தொடர்ச்சியான தோல்வியை சந்தித்ததும், பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. பல ஆண்டுகளாக மற்ற அணிகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்த சிஎஸ்கே, கடந்த 2 ஐபிஎல் சீசன்களிலும் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

ஏனெனில், தற்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணி நடப்பு சீசனிலும் இதேபோன்ற ஒரு முடிவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக சிஎஸ்கே மாஜி வீரர் பத்ரிநாத் கூறுகையில், ‘‘முன்பு, பிற அணிகளில் தடுமாறிய வீரர்கள் சிஎஸ்கேவிற்கு வந்து சிறப்பாக செயல்படுவார்கள். இப்போது, சிஎஸ்கேவில் இருந்து வெளியேறும் வீரர்கள் பிற இடங்களில் திறம்பட செயல்படுகிறார்கள்.

களத்திலும், வெளியிலும் சிஎஸ்கே அணி ஒரு நெருக்கடியுடன் இருப்பதாக தெரிகிறது. 5 முறை சாம்பியன் வென்ற ஒரு அணி களத்தில் தடுமாறுவது அதிர்ச்சியளிக்கிறது. ஏலத்தில் அனுபவமில்லாத இந்திய வீரர்களான பிரசாந்த் வீர், கார்த்திக் ஷர்மா ஆகியோருக்காக மொத்தம் ரூ.28.40 கோடி முதலீடு செய்தது மோசமான முடிவு. இதன்மூலம் பல சிறந்த வீரர்களை குறைந்த விலையில் வாங்கும் வாய்ப்பை சிஎஸ்கே இழந்தது. சாம்சனுக்காக ஜடேஜா மற்றும் சாம் கரணை விட்டதால் சிஎஸ்கே அணி தற்போது தள்ளாடுகிறது,’’ என்றார்.