Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நடப்பு சாம்பியனுக்கு எதிராக அரையிறுதியில் போராடி தோல்வி: த்ரீசா ஜாலி-காயத்ரிக்கு வெண்கலம்

புதுடெல்லி: பிடபுள்யுஎப் உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில், உலகின் நம்பர் 1 மற்றும் நடப்பு சாம்பியனுமான சீனாவின் லியு ஷெங் ஷு டான் நிங் ஜோடியிடம் போராடி தோற்ற த்ரீசா ஜாலி காயத்ரி கோபிசந்த் இணை, வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தது. பரபரப்பான அரையிறுதியில் பலம் வாய்ந்த சீன ஜோடிக்கு எதிராக முனைப்புடன் போராடிய இந்திய வீராங்கனைகள் 21-18 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றனர்.

எனினும், அடுத்த 2 செட்டிலும் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஷெங் ஷு டான் நிங் இணை 18-21, 21-13, 21-8 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி பைனலுக்கு முன்னேறியது. இப்போட்டி 1 மணி, 11 நிமிடத்துக்கு நீடித்தது. அரையிறுதியில் தோற்றாலும், த்ரீசா ஜாலி காயத்ரி கோபிசந்த் இணை இந்தியாவுக்காக உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற திருப்தியுடன் விடைபெற்றது.