டிஜமினா: மேற்கத்திய கல்விக்கு எதிராக கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக போராடி வரும் போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் நைஜீரியாவின் வடகிழக்கில் இஸ்லாமிய சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றனர். இதனால் ஏற்பட்டுள்ள தீவிரவாத தாக்குதல்கள் கேமரூன், நைஜர், சாட் நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், சாட் நாட்டில் உள்ள சாட் லேக் பிராந்தியத்தில் ராணுவ முகாம் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில், 17 சாட் ராணுவ வீரர்கள் , 96 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.