இம்பால்: மணிப்பூரில் இன்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒருபகுதியான வீடு வாரியான பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட இருந்தன. இதனிடையே, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பாக தேசிய குடிமக்கள் பதிவேட்டை(என்ஆர்சி) புதுப்பிக்க வேண்டும் என மணிப்பூரில் உள்ள 14 சிவில் அமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், மணிப்பூரின் தற்போதைய நிலைமைய ஆய்வு செய்வதற்காக, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து மணிப்பூர் முதல்வர் செயலகம் நேற்று வௌியிட்ட அறிக்கையில், “மணிப்பூர் மக்களின் உணர்வுகளையும், விருப்பங்களையும் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் திட்டமிடப்பட்டிருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை ஒத்தி வைக்க ஒன்றிய உள்துறை அமைச்சர் தலைமையிலான கூட்டத்தில ஒப்பு கொள்ளப்பட்டது” என தெரிவித்துள்ளது.



