ஓசூர் அருகே அஞ்செட்டியில் கணக்கெடுப்பு முன்னோட்டம்: டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்து அஞ்செட்டியில் டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான முன்னோட்டம் நடைபெற்று வருகிறது. ஓசூர் அருகே முன்சோதனை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியானது தொடங்கியது. அதாவது நாடுமுழுவதும் 2027ஆம் ஆண்டு டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கவுள்ளது. அதற்காக தமிழகத்தில் மொத்தம் மூன்று இடங்களில் முன்சோதனை மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியானது மேற்கொள்ளப்படுகிறது.
அதன் அடிப்படியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்து அஞ்செட்டியில் மலை கிராம பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய மக்கள் கணக்கெடுப்பு அலுவலக முகாமை மேற்பார்வையில் முன்சோதனை மக்கள் தொகை கணக்கெடுப்பு அஞ்செட்டி தாலுகாவில் 3, 4, 5, ஆகிய தேதிகளில் அதிகாரிகள் முன்னிலையில் ஆசிரியர்கள், வருவாய் துறையினர், மற்றும் கிராம அலுவலர்களுக்கு எவ்வாறு கையாளுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் நேற்று காலை முதல் 15ஆம் தேதி வரை கிராமங்களில் சூப்பர்வைசர் தங்களுடைய செல்போன்களில் வரைபடம் மூலமாக அந்த பகுதியை தேர்வு செய்வார்கள். அதன் பிறகே அந்த பகுதியில் உள்ள வீடுகள் எவ்வாறு உள்ளது. வீட்டில் என்னென்ன பொருட்கள் உள்ளது என 32 ஆவணங்கள் மூலமா தகவல் சேகரிக்கப்படும்.அது மூலம் சேகரிக்கப்பட்டு பின்புதான் மீண்டும் பதிவேற்றம் செய்யப்படும்.
அந்த பதிவை தொடர்ந்து 31ஆம் தேதி வீடுகளில் மக்கள் தொகையானது கணக்கெடுப்பு நடத்த உள்ளது. இந்த பணியில் 86 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 17 மேற்பார்வையாளர்கள் ஈடுபடுவார்கள். 2027ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுக்கும் போது எதிர்நோக்கும் சவால்களை முன்சோதனைகள் மூலம் கண்டறிந்து நிவர்த்தி செய்வதற்காகவே கணக்கெடுப்பு பணியானது நடைபெற்று வருகிறது. அஞ்செட்டியில் தாலுகாவில் மொத்தம் 197 கிராமங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு சோதனை நடக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.