Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

சிபிஎஸ்சி-யின் திறனற்ற செயல்பாடு கவலையளிக்கிறது: கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு

சென்னை: சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மறுமதிப்பீட்டு செயல்முறையைச் சுற்றியுள்ள சிக்கல்களைத் திறம்பட நிர்வகித்து தீர்க்கத் தவறியிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது என கனிமொழி எம்.பி கூறியுள்ளார் .

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; தொழில்நுட்பக் கோளாறுகள், தாமதங்கள் மற்றும் போதுமான தகவல்தொடர்பு இல்லாததால், லட்சக்கணக்கான மாணவர்கள் கவலையுடனும், நிச்சயமற்ற தன்மை, மன அழுத்தம் மற்றும் குழப்பத்துடனும் தவிக்கின்றனர். ஆண்டு முழுவதும் கடினமாக உழைத்த மாணவர்கள், வெளிப்படையான, நம்பகமான ஒரு கல்வி முறைக்குத் தகுதியானவர்கள்.

ஆனால் நீட் (NEET) மற்றும் சி.யு.இ.டி-யு.ஜி (CUET-UG) தொடர்பான சர்ச்சைகள் முதல் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் தொடர்ச்சியான நிர்வாகக் குறைபாடுகள் வரை, இந்தியாவின் தேர்வு முறையை வாட்டி வதைக்கும் தொடர்ச்சியான தோல்விகளில் இந்த நிகழ்வு மற்றுமொரு கூடுதல் நிர்வாக குறைபாடாக சேர்ந்துள்ளது. இத்தகைய தோல்விகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இருவருக்கும் பெரும் மன உளைச்சலைத் தொடர்ந்து ஏற்படுத்துகின்றன.

ஒன்றிய பாஜக அரசு இந்த கவலைகளை கருத்தில் கொண்டு விரைவாக அவற்றை களைந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தி, பொறுப்புக்கூறலை உறுதிசெய்து, கல்வி முறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும். இந்திய இளைஞர்கள் தங்கள் கடமையைச் செய்துவிட்டனர். அரசும் தன் கடமையைச் செய்யும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என பதிவிட்டு உள்ளார்.