தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவேரி மருத்துவமனை சார்பில் இதயவியல் நிபுணர்கள் பங்கேற்ற 2 நாள் சர்வதேச கருத்தரங்கம்

Advertisement

சென்னை: காவேரி மருத்துவமனை சார்பில் “மரபுவழி இதய நோய்கள் மேலாண்மையில் சமீபத்திய முன்னேற்றங்கள்” என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் இதயவியல் நிபுணரான சஞ்சய் ஷர்மா, இதய செயலிழப்பு மற்றும் குருதி ஊட்டக்குறை துறையின் பேராசிரியர் புரொஃபசர் ஆர்தர் ஒயில்டு உட்பட இதயவியல் மற்றும் இதய மின்னியங்கியல் துறையைச் சேர்ந்த பல்வேறு நிபுணர்களும், கல்வியாளர்களும் கலந்து கொண்டனர்.

இக் கருத்தரங்கு தொடர்பாக டாக்டர் அனந்தராமன் கூறியதாவது: 40 முதல் 69 வயது பிரிவில் நிகழும் இறப்புகளுள் 45 சதவீதம் இதயநாள நோய்களால் ஏற்படுகிறது. மிக அதிகமான இதயநோய் சுமைகள் உள்ள உலகின் முன்னணி நாடுகளுள் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இதயநோய், உடற்பருமன், நீரிழிவு மற்றும் பிற பாதிப்புகள் இயல்பாகவே அதிகம் ஏற்படக்கூடிய நபர்களாக இந்திய மக்கள் கொண்டிருக்கின்றனர். மரபுவழி இதயநோய் தொடக்கத்தில் எந்த அடையாளங்களையோ அல்லது அறிகுறிகளையோ வெளிப்படுத்துவதில்லை என்பதால், பல நேரங்களில் அலட்சியமாக விடப்படுகிறது.

இதுகுறித்து போதுமான விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே இந்த ஆபத்தை / இடர்வாய்ப்பை சரிவர நிர்வகிக்கவும், சமாளிக்கவும் இயலும். இளவயது நபர்களில் இதயம் சார்ந்த இடர்வாய்ப்புகள் குறித்து இந்த நவீன யுகத்திலும் விழிப்புணர்வு கணிசமாக குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக திடீர் இதயச் செயலிழப்பால் ஏற்படும் இறப்பு குறித்து விழிப்புணர்வு பலருக்கும் குறைவாகவே இருக்கிறது. கார்டியோஜெனிடிக்ஸ் (மரபியல் சார்ந்த இதய நோய்கள்) பிரிவானது அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

பாதிக்கப்பட்ட நபரில் காணப்படும் மரபியல் மாற்றத்தை அடையாளம் காணவும் மற்றும் அதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கான ஸ்க்ரீனிங் சோதனையை செய்யவும், அடுத்த தலைமுறை வரிசைமுறைப்படுத்தல் வசதி கிடைப்பது இந்தியாவில் மரபியல் சோதனையை எளிதில் கிடைக்கப்பெறுவதாக மாற்றியிருக்கிறது. இந்நோய்களுக்கான சிகிச்சை முறைகளில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து சர்வதேச நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொள்ள இக்கருத்தரங்கு ஒரு நல்ல செயல்தளமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News