தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாட்டில் தீர்மானம்

Advertisement

தஞ்சாவூர்: காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரிய அமைத்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 27வது மாநில மாநாடு தஞ்சாவூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. 2வது நாளாக நேற்று மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் வருமாறு: காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ஒன்றிய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் டெல்டா மாவட்டங்களில் தொழில் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கைகளும், மறைமுகமான அழிவு திட்டங்களும் செயல்படுத்த இருப்பதாக அறிகிறோம். ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் எந்த விதமான விவசாய விளைநிலங்களுக்கு பாதிப்புகள், அழிவுகள் ஏற்படுத்துகின்ற திட்டங்களை அமல்படுத்த கூடாது. ஒன்றிய, மாநில அரசுகள் அழிவுத்திட்டங்களை கைவிட வேண்டும். கனிம வளங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். காவிரி நதிநீர் பிரச்சனையில் 15 ஆண்டுகள் வரை நீர் பங்கீடு குறித்தான மேல்முறையீடு செய்ய முடியாது என்கிற தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும்.

கரும்பு உற்பத்திக்கான கட்டுப்படியான விலையாக டன் ஒன்றுக்கு 5000 ரூபாய் அறிவிக்க வேண்டும். தனியார் கொள்முதல் செய்யலாம் என்ற அனுமதியை தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் அமல்படுத்த கூடாது. பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 2 நாட்கள் நடைபெற்ற மாநாடு நேற்று நிறைவடைந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இரண்டு நாள் நடைபெற்ற மாநாட்டினை நிறைவு செய்து பேசினார்.

Advertisement

Related News