Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

'வறண்டு கிடக்கும் காவிரியை' ரீல்ஸ் எடுத்துப்போட தயாரா.? - தவெக-வினருக்கு கேள்வி

தஞ்சை: ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் காவிரிக்காக களத்திற்கு திமுக வந்து போராடுவது தமிழ்நாட்டின் நலனுக்காக மட்டும் தான் என்று, விவசாய விரோத தவெக ஆட்சியை கண்டித்து தஞ்சையில் திமுக சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிமுன் அன்சாரி பேசிய உள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான ஆர்ப்பாட்டத்தில் பேசிய மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, எங்கு சென்றாலும் ரீல்ஸ் எடுக்கும் தவெக அமைச்சர்கள், வறண்டு கிடக்கும் காவிரியை ரீல்ஸ் எடுத்துப்போட தயாராக இருக்கிறார்களா.? என்று கேள்வி எழுப்பினார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் கர்நாடாகா அரசுக்கு எதிராக, தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். சம்பா சாகுபடி நிவாரணமாக தமிழ்நாடு அரசு ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.40,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தமிமுன் அன்சாரி வலியுறுத்தி உள்ளார்.

இதனிடையே திமுக நடத்திய கண்டன ஆர்பாட்டத்தில் பேசிய மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, விவசாயிகளின் நலன்களை காப்பதில் அன்றும், இன்றும் திமுக-வே முன் நிற்கிறது. முதலமைச்சர் விஜய்க்கு காவிரி தொடர்பான சரியான புரிதல் உள்ளதா என்பதே சந்தகேமாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகளின் ஆலோசனைகளை கேட்டு, முதல்வர் விஜய் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.