குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
சென்னை: குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஒன்றிய அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தற்போதைய முறையைத் தொடர்ந்தால், மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்காகச் செலவிடப்படும் சுமார் ரூ.12 ஆயிரம் கோடி வீணாகும். மாநில அரசிடம் பெற்ற பட்டியலில் இருந்து மக்கள் தங்கள் ஜாதியை தெரிவு செய்யும் வாய்ப்பை தர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

