முழுமையான விசாரணைக்கு பிறகே சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!!
Advertisement
அதுமட்டுமின்றி பட்டியலின மற்றும் பழங்குடியினர்களுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்குவதற்கு அரசு வகுத்துள்ள விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும், விதிகளை பின்பற்றாத அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சாதி சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆராய போதுமான எண்ணிக்கையில் மாநில அளவிலான குழு அமைக்க வேண்டும் என்றும், இந்த குழுக்கள் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், முழுமையான விசாரணைக்கு பிறகே சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இது சம்பந்தமாக 6 வாரங்களில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருக்கிறார்கள்.
Advertisement