சாதிவாரி கணக்கெடுப்புக்கு பிறகு இஸ்லாமியர் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்: தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்
சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் பொதுச்செயலாளர் முஜிபுர் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கை:
சாதிவாரி கணக்கெடுப்புக்கு பிறகு தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது அதிகரிக்கப்பட வேண்டும். அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்தை அறியும் வகையில் வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். சென்னையில் உள்ள 2 பள்ளிவாசல்களில் சில சமூக விரோதிகளால் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் குடிபோதையில் இருந்தார்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. தாக்குதல்களின் பின்னணியில் உள்ளவர்கள் மீது மிக கடும் நடவடிக்கை எடுப்படுவதை போலீசார் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


