சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்குமார் அறிக்கை:
முதல்வர் விஜய் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்திடவும், அதனை முறையாக நடைமுறைப்படுத்த ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் ஓர் ஆணையம் அமைத்திடவும் எடுக்கப்பட்ட முடிவு என்பது கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவு செய்யக்கூடிய ஒன்றாகும்.


