லக்னோ: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகன் என குற்றம் சாட்டி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் அசோக் பாண்டே மற்றும் ரஜ்னிஷ் குமார்சிங் ஆகியோர் ரிட் மனு தாக்கல் செய்திருந்தனர். ராகுல்காந்தி இங்கிலாந்தை சேர்ந்த பேக்காப்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் முக்கிய பங்குதாரர். எனவே பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த அவர் எம்பியாக தொடர்ந்து நீடிப்பதற்கு எதிர்த்து குவோ வாரண்டோ ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சேகர் பி.சரப் மற்றும் அவதேஷ் குமார் சவுத்ரி ஆகியோர் மனுதாரர்கள் இந்த குற்றச்சாட்டுக்கான எந்த ஒரு உறுதியான ஆவணத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டனர்.



