Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆன்லைன் மதுபான முன்பதிவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை: ஆன்லைன் மூலம் மதுபானம் முன்பதிவு செய்யும் வசதிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மது அருந்துவோருக்கு வசதி செய்து கொடுத்தால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய தீங்கு ஏற்படும் என மனுதாரர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு அரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். “ரேஷன் கடைகளில் ஆன்லைனில் முன்பதிவு செய்ய எந்த வசதியும் இல்லை. ஆனால், மதுபானத்திற்கு மட்டும் ஆன்லைன் முன்பதிவு வசதி ஏன்?” என வழக்கறிஞர் பாலு கேள்வி எழுப்பினார். ஆன்லைனில் மதுபானம் முன்பதிவு செய்வதற்கான அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.