Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரியும் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டித்த அரசாணையை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுராந்தகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.பாஸ்கரன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 28 மாவட்ட பஞ்சாயத்துக்களுக்கான பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி முடிவடைந்துவிட்டது. இதையடுத்து 2025 ஜனவரி 6 முதல் ஜூலை 5வரை பஞ்சாயத்துகளுக்கு தனி அதிகாரியை நியமித்து தமிழக அரசு ஆணை பிறபித்தது. இந்த கால வரம்பு 4 முறை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 12ம் தேதி தமிழக அரசின் பஞ்சாயத்து சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இந்த 9 மாவட்டங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் கடந்த 19ம் தேதி முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் புதிதாக உருவான 93 கிராம பஞ்சாயத்துகள் தவிர மற்ற அனைத்து மாவட்ட பஞ்சாயத்துகளுக்கும் தனி அதிகாரிகளை நியமனம் செய்து அக்டோபர் 19ம் தேதி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் 28 மாவட்ட பஞ்சாயத்துக்களுக்கான தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டித்துள்ளது விதிகளுக்கு முரணானது. தற்போதுள்ள நிலையில் 28 மாவட்டங்களுக்கு கடந்த 21 மாதங்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லை.

எனவே, தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு அரசாணையை ரத்து செய்து குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்துமாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.