புதுடெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதி பேசுவதாகவும் கூறி பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்தும், தண்டனை நிறுத்தி வைக்க கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சுகேஷ் சந்திரசேகர் மேல்முறையீடு செய்திருந்தார்.
அந்த மனு நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் சட்ட ரீதியாக எந்த ஒரு தவறையும் காண முடியவில்லை, எனவே இதில் மேற்கொண்டு தலையிட விரும்பவில்லை என தெரிவித்து சுகேஷ் சந்திரசேகரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்


