Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குடிநீர், கழிவுநீர் வசதி செய்வதாக காசா கிராண்ட் நிறுவனம் ரூ.34 கோடி பெற்று மோசடி: குடியிருப்புவாசிகள் போராட்டம்

அண்ணாநகர்: சென்னை முகப்பேரில் 440 வீடுகளை கொண்ட காசா கிராண்ட் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு 370க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 2024ம் ஆண்டு முதல் வசித்து வருகின்றன. இந்த குடியிருப்பு பகுதியில் குடிநீர், பாதாள சாக்கடை, சோலார் மின் உற்பத்தி, பாதுகாப்பு மற்றும் முறையான பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக வழங்கவில்லை என குடியிருப்புவாசிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், ஒருங்கிணைப்பாளர் சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது:ஒரு மாதத்திற்கு ரூ.32 லட்சம் வரை பராமரிப்பு தொகை வசூலிக்கப்படும் நிலையில் ரூ.10 லட்சம் குடிநீருக்கு செலவிடுவதாகவும், நாள் ஒன்றுக்கு 25 லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வருவதாகவும் கூறுகின்றனர். ஆனால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், காலை நேரங்களில் அலுவலக பணி, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுகிறோம். இதுகுறித்து கடந்த 2 மாதங்களாக கட்டுமான நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. மேலும் குடியிருப்பு நலச் சங்கம் உருவாக்கவிடாமல் கட்டுமான நிர்வாகம் தடுக்கிறது.

அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறுவதற்கு முன் 4ல் மூன்று பங்கு 406 கிலோவாட் சோலார் மின் உற்பத்தி அமைத்துக் கொடுப்பதாக தெரிவித்த நிலையில் 60 கிலோ உற்பத்தி செய்ய மட்டுமே சோலார் உபகரணங்கள் பொருத்தி உள்ளனர். இதன் காரணமாக மாதம் ரூ.7 லட்சம் வரை மின்கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது.

மாநகராட்சியிடம் பேசி குடிநீர், கழிவுநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுப்பதாக குடியிருப்பு வாசிகளிடமிருந்து ரூ.34 கோடி பெற்றுக் கொண்டு இதுவரை எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை. கட்டுமான நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால் துறை சார்ந்த அமைச்சர்களை சந்தித்து புகார் அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.