Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஷார்ஜாவில் இருந்து கராச்சி சென்ற கே2 ஏர்வேஸ் சரக்கு விமானம் மாயம்: அரபிக் கடலில் தேடுதல் வேட்டை

ஷார்ஜா: ஷார்ஜாவில் இருந்து கராச்சி சென்று கொண்டிருந்த கே2 ஏர்வேஸ் நிறுவன சரக்கு விமானம் மாயமாகி இருக்கிறது. அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தால் அரபிக் கடலில் தேடுதல் வேட்டை நடக்கிறது.

பாகிஸ்தானை சேர்ந்த கே2 ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 சரக்கு விமானம், நேற்று இரவு ஷார்ஜாவில் இருந்து கராச்சி நோக்கி புறப்பட்டது. இரவு 9:18 மணியளவில், விமானத்தின் வழிகாட்டும் அமைப்பில் கோளாறு ஏற்பட்டதாக விமானிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கராச்சி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் விமானத்துக்கு வழிகாட்டியது.

ஆனால், அடுத்த நான்கு நிமிடங்களில் விமானம் திடீரென உயரத்தை வேகமாக இழந்து, திசையையும் மாற்றியதாக ரேடாரில் பதிவானது. அதன்பின், கராச்சிக்கு மேற்கே 300 கி.மீ., தொலைவில் விமானத்துடனான ரேடார் மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அது கடல் பகுதி.

இதையடுத்து, பாகிஸ்தானின் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து கடலில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளன. இந்த விமானத்தில் ஐந்து பணியாளர்கள் இருந்ததாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.