Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

‘ஏலக்காய்’ விளம்பர சர்ச்சையில் திருப்பம்; 3 பாலிவுட் நடிகர்கள் மீது நடவடிக்கை பாயுமா?.. மகாராஷ்டிரா அரசு தீவிர ஆலோசனை

மும்பை: ஏலக்காய் விளம்பரத்தில் நடித்த 3 பாலிவுட் நடிகர்களின் விளக்கத்தைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அடுத்தகட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு முழுமையான தடை அமலில் உள்ளது. இந்த சூழலில், தடையை மீறி பான் மசாலா விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் மறைமுகமாக ‘ஏலக்காய்’ என்ற பெயரில் விளம்பரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, சட்டவிரோத மறைமுக விளம்பரத்தில் தோன்றிய பாலிவுட் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராப் ஆகிய 3 நடிகர்களுக்கும் மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி அதிரடி நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசுக்கு சம்பந்தப்பட்ட 3 நடிகர்களும் விளக்கம் அளித்துள்ள நிலையில், நேரில் ஆஜராக அவகாசம் கேட்ட 2 நடிகர்களிடம் கடந்த செப்டம்பர் 28ம் தேதி துறை ரீதியான விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது.

இதுகுறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துக்காராம் முண்டே தெரிவிக்கையில், ‘நோட்டீஸ் அனுப்பப்பட்ட 3 நடிகர்களிடம் இருந்தும் பதில் பெறப்பட்டுவிட்டது; நேரில் ஆஜராகக் கோரிய 2 நடிகர்களுக்கான விசாரணையும் முடிந்துவிட்ட சூழலில், சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் நடிகர்கள் மீது இதுவரை அபராதமோ அல்லது இறுதி உத்தரவோ அறிவிக்கப்படாத நிலையில், அரசின் முடிவு குறித்து பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.