டெல்லியே பதற்றத்தில் இருக்கும் போது கார் டிக்கியில் படுத்து தூங்கியபடி வந்த வாலிபர்: சோதனை நடத்திய போலீசார் அதிர்ச்சி சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
புதுடெல்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து தீவிரவாத டாக்டர்கள் குழுவினர் வாங்கிய 3வது காரை கண்டுபிடிக்கவும், தீவிர வாகன சோதனைநடத்தவும் போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக டெல்லி முழுவதும் பதற்றத்தின் பிடியில் உள்ளது. இந்த நிலையில் டெல்லி திமார்பூர் காவல் நிலைய பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது ஒரு காரின் டிக்கியில் ஒரு வாலிபர் அசால்ட்டாக தூங்கியபடி வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
அந்த வீடியோவில், பாதுகாப்பு சோதனைக்காக ஓட்டுநர் காரின் டிக்கியைத் திறந்த பிறகு, காவல்துறையினர் காரின் டிக்கிக்குள் ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்கள். அந்த வாலிபரை தட்டி எழுப்புகிறார்கள். விசாரணையில் காருக்குள் குறைந்த இடம் இருந்ததால் பயணத்தின் போது அவர் டிக்கியில் படுத்து தூங்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. காரில் சட்டவிரோதமான பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து அவர்கள் செல்ல போலீசார் அனுமதித்தனர்.