சென்னை: பேரவைக்கு ஆட்டோவில் வருவதாக கூறிய தவெக எம்.எல்.ஏ. சபரி ஐங்கரனுக்கு சொந்தமாக கார் இருப்பது அம்பலமாகியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன்கீழ் முதல்வர் விஜய் இன்று காலை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என்றும், வாகன ஓட்டுநர், எரிபொருள், வாகன பராமரிப்புக்கு மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படியாக வழங்கப்படும் என்றும் எம்.எல்.ஏக்கள் தங்களது தொகுதி சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ஒரு உதவியாளரை நியமித்துக் கொள்ள ரூ.25,000 உதவியாளர்படியாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவித்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசினார். அப்போது பெரியகுளம் தவெக எம்.எல்.ஏ. சபரி ஐங்கரன் பேசுகையில்: ”சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கார் வழங்கியுள்ள முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரேவொரு விஷயம் நகைச்சுவைக்காக சொல்கிறேன். கல்லூரி படிக்கும்போது காதல் தோல்வி ஏற்பட்டது. வேலையும் இல்ல, காரும் இல்ல. இன்று இரண்டையும் முதல்வர் கொடுத்துள்ளார். நான் ரயிலில் வருகிறேன், அங்கிருந்து ஆட்டோவில் பேரவைக்கு வரும்போது, ஒவ்வொரு முறையும் காவலர்கள் யார் என்று கேட்பார்கள்.
எம்.எல்.ஏ. எனக் கூறி அடையாள அட்டையைக் காண்பித்தாலும் நம்ப மாட்டார்கள்” எனத் தெரிவித்தார். பேரவைக்கு ஆட்டோவில் வருவதாக கூறிய தவெக எம்.எல்.ஏ. சபரி ஐங்கரனுக்கு சொந்தமாக கார் இருப்பது அம்பலமாகியுள்ளது. பெரியகுளம் தவெக எம்.எல்.ஏ. சபரி ஐங்கரன் தனது பிரமாணப் பத்திரத்திலேயே கார் இருப்பதாக காட்டியுள்ளார். விலை உயர்ந்த புத்தம் புது ரேஞ்ச் ரோவர் டிஃபெண்டர் காருடன் நிற்பது போல் சபரி ஐங்கரன் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். இதனிடையே MLAக்களுக்கு இன்னோவா கார் வேண்டும் எனக் கேட்ட தவெக எம்.எல்.ஏ. சண்முகனிடம் 2 பென்ஸ் கார்கள் உள்ளன.
இன்னோவா கார் கேட்ட தவெக எம்எல்ஏ சண்முகனிடம் 2 பென்ஸ் கார்கள், ஒரு இன்னோவா, ஃபோக்ஸ்வேகன் கார் உள்ளன. மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சண்முகனிடம் ஜி.எல்.இ.250 -4 மேட்டிக் ரக பென்ஸ் உள்பட 4 சொகுசு கார்கள் உள்ளன.



