Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சதம் விளாசினார் கேப்டன் திலக் வர்மா: தென் மண்டலம் முன்னிலை

பெங்களூரு சிஓஇ வளாக 2வது மைதானத்தில் நடக்கும் துலீப் கோப்பை 2வது அரையிறுதியில் வடக்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 195 ரன்னுக்கு சுருண்ட நிலையில், தெற்கு மண்டலம் 3ம் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன் குவித்து 90 ரன் முன்னிலை பெற்றுள்ளது. நாராயண் ஜெகதீசன் 36, ரவிச்சந்திரன் ஸ்மரன் 27, ஷ்ரேயாஸ் கோபால் 87 ரன் (169 பந்து, 11 பவுண்டரி) எடுக்க, 4 வீரர்கள் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். தியாகராஜன் 6 ரன்னில் வெளியேறினார்.

ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய கேப்டன் திலக் வர்மா சதம் விளாசினார். திலக் 106 ரன் (225 பந்து, 7 பவுண்டரி), கவுரி சாய்தேஜா (0) ஆட்டமிழக்காமல் உள்ளனர். வடக்கு மண்டல பந்துவீச்சில் குர்னூர் பிரார் 4, அர்ஷ்தீப் சிங், அன்ஷுல் காம்போஜ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.