சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற த.வெ.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் ஏப்.23ம் தேதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட பிரதான கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர். வேட்பு மனு நாளை (30-ம் தேதி) தொடங்கப்படவுள்ள நிலையில், இந்த தேர்தலில் முதன்முதலாக களமிறங்கும் த.வெ.க, வேட்பாளர் பட்டியலை எப்போது வெளியிடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்தார்.
அதன்படி;
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு - சி.ஜோசப் விஜய்
தி. நகர் - என்.ஆனந்த்
வில்லிவாக்கம் - ஆதவ் அர்ஜுனா
கோபி - செங்கோட்டையன்
திருச்செங்கோடு - அருண்ராஜ்
திருப்பரங்குன்றம் - நிர்மல் குமார்
குமாரபாளையம் - விஜயலட்சுமி
திட்டக்குடி - ராஜசேகர்
சைதாப்பேட்டை - அருள் பிரகாசம்
வால்பாறை - ஸ்ரீதரன்
எழும்பூர் - ராஜ்மோகன்
லால்குடி - கு.பா.கிருஷ்ணன்
திருப்பர் வடக்கு - சத்யபாமா
ஆயிரம் விளக்கு - ஜேடிசி பிரபாகர்
ஆர்.கே.நகர் - மரியவிலசன்
ஆவடி - ஆர்.ரமேஷ்
மதுரவாயல் - ரெவந்த் சரண்
திரு.வி.க நகர் - பல்லவி
ராயபுரம் - விஜய் தாமு
துறைமுகம் - சினோரா பி.அசோக்
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - செல்வம்
அண்ணா நகர் - வி.கே.ராம் குமார்
விருகம்பாக்கம் - சபரி நாதன்
வேளச்சேரி - ஆர்.குமார்
சோழிங்கநல்லூர்- ஈசிஆர் சரணவன்
தாம்பரம் - கில்லி சரத்
செங்கல்பட்டு - தியாகராஜன்
தருமபுரி - எம்.சிவன்
திருப்போரூர் - விஜய் ராஜ்
- உள்ளிட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்.

