Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இரண்டாம் கட்ட பரப்புரை தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாளையில் நாளை பிரசாரம்

நெல்லை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாம் கட்ட பரப்புரையாக நாளை (ஏப்.3ம் தேதி) நெல்லை பாளையங்கோட்டையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறார்.

திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திருவாரூரில் முதற்கட்ட பிரசாரத்தை தொடங்கி திருச்சியில் முடித்தார். இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நெல்லையில் இருந்து முதல்வர் தென்மாவட்ட பிரசாரத்தை தொடங்குகிறார்.

இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (2ம் தேதி) வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை தெற்கு பைபாஸ் சாலையில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகே நடக்கும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளர் அப்பாவு, பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் அப்துல்வஹாப், நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் சுப்பிரமணியன் ஆகியோருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்கிறார். மேலும் நாங்குநேரி, அம்பாசமுத்திரம் தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கும் ஆதரவு திரட்டுகிறார். நெல்லை பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு நாகர்கோவில் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.

மறுநாள் காலை 9 மணிக்கு நாகர்கோவிலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ், நாகர்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின், பத்மநாபபுரம் மார்க்சிஸ்ட் வேட்பாளர் செல்லசுவாமி ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். மேலும் குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தும் பிரசாரம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்படும் முதல்வர் நெல்லை வண்ணார்பேட்ைட ஜிஆர்டி ஓட்டலில் மதிய உணவு சாப்பிடுகிறார்.

மாலையில் நெல்லையில் இருந்து புறப்பட்டு சங்கரன்கோவில் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்ட திமுக வேட்பாளர்கள் வாசுதேவநல்லூர் தொகுதி ராஜா, ஆலங்குளம் மனோஜ் பாண்டியன், தென்காசி கலை கதிரவன், கடையநல்லூர் தொகுதி மதிமுக வேட்பாளர் தி.மு.ராஜேந்திரன் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியையும் முதல்வர் ஆதரித்து பேசுகிறார்.