Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பைக்காரா படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி : ஊட்டி பைக்காரா படகு இல்லத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். குறிப்பாக ஸ்பீட் படகில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டினர். சர்வதேச சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக ஊட்டி விளங்கி வருகிறது. இங்கு ஆண்டு முழுவதும் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள்.

குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் கூட்டம் பல மடங்கு அதிகரிக்கும். ஊட்டி வர கூடிய சுற்றுலா பயணிகள் நகருக்குள் இருக்க கூடிய தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்டவற்றை பார்வையிடுவது மட்டுமின்றி நகருக்கு வெளியில் அமைந்துள்ள பிற இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலங்களை பார்வையிட ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனிடையே நீலகிரி மாவட்டம் ஊட்டி - கூடலூர் சாலையில் சுமார் 22 கிமீ தொலைவில் பைக்காரா அணை அமைந்துள்ளது. வனத்திற்கு நடுவே இந்த அணை அமைந்துள்ளது. இந்த அணையில் உள்ள நீைர கொண்டு சிங்காராவில் நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றன. கடநாடு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கு குடிநீர் விநியோகமும் செய்யப்பட்டு வருகிறது.

இந்த அணையில் சுற்றுலா துறை கட்டுபாட்டில் உள்ள படகு குழாம் உள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிந்து படகு பைக்காரா அணையில் படகு சவாரி செய்வது வழக்கம். இங்கு இயக்கப்படும் ஸ்பீட் படகு பிரசித்தி பெற்றதாகும்.

நீரை கிழித்துக்கொண்டு செல்லும் ஸ்பீட் படகில் செல்வதற்கு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஊட்டியில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகாித்துள்ளது.

இ-பாஸ் பெற்று சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனிடையே ைபக்காரா படகு இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படும் நிலையில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து வருகின்றனர். குழுவாக வர கூடியவர்கள் மோட்டார் படகில் இயற்கை காட்சிகளை பார்த்தவாறு, பயணித்து மகிழ்ந்தனர். இதேபோல் பைக்காரா அருவி, சூட்டிங் மட்டம், பைன் பாராஸ்ட் பகுதிகளிலும் கூட்டம் காணப்பட்டது.