சென்னை: இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு மட்டுமே முதலமைச்சர் பயணம் மேற்கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இடைத்தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாகவே 4 நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையால் ஜிஎஸ்டி வரி வசூல் சரிந்துள்ளதாகவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் விமர்சித்துள்ளார். தவெக அரசின் நிர்வாகத் திறனற்ற தன்மையே விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
+
Advertisement


