Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓடும் காரில் தீ தொழிலதிபர் பலி

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ஓட்டல் அதிபர் அன்பழகன் (67), ஆண்டிமடத்தில் உள்ள ஓட்டலை திறப்பதற்காக நேற்று காலை 7 மணிக்கு தனது காரில் சென்றார். அப்போது, காருக்கு அடியில் தீ பிடித்து கார் முழுவதும் பரவியது. இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு அன்பழகன் மயங்கி சென்டர் மீடியனில் காரை மோதினார். இதில் அவர் கருகி பலியானார்.