சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,360க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,170க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், வட்டி விகித ஏற்றத்தாழ்வுகள், புவியியல் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சென்னையில் ஒரேநாளில் இரண்டு முறை தங்கத்தின் விலை மாற்றி விற்பனையானது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,120க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.14,015க்கும் விற்பனையானது. காலையில் சவரனுக்கு ரூ.1,920 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,120 உயர்ந்து சவரன் ரூ.1,13,240க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,360க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,170க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது.

